எலான் மஸ்க் மற்றும் ஓபன் ஏஐ: நிறுவனத்தை வாங்கும் முயற்சி

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் "OpenAI விற்பனைக்கு இல்லை" என தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு, எலான் மஸ்க் பிரபல சமூக ஊடக செயலியான ட்விட்டரை வாங்கி, அதனை "எக்ஸ்" என பெயர் மாற்றினார். தற்போது, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணி நிறுவனம் ஆன ஓபன் ஏஐ நிறுவனத்திற்கும் தனது கவனம் செலுத்தியுள்ளார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகள் வழங்கும் இந்த நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது, இதன் தலைமை நிர்வாக […]

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் "OpenAI விற்பனைக்கு இல்லை" என தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு, எலான் மஸ்க் பிரபல சமூக ஊடக செயலியான ட்விட்டரை வாங்கி, அதனை "எக்ஸ்" என பெயர் மாற்றினார். தற்போது, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணி நிறுவனம் ஆன ஓபன் ஏஐ நிறுவனத்திற்கும் தனது கவனம் செலுத்தியுள்ளார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகள் வழங்கும் இந்த நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது, இதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன். எலான் மஸ்க் 2018 ஆம் ஆண்டில் ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து வெளியேறினாலும், தற்போது அவர் மற்றும் அவரது முதலீட்டாளர்கள் குழு அந்த நிறுவனத்தை வாங்க விரும்பி, 97.4 பில்லியன் டாலருக்கு கொடுக்க அறிவுறுத்தல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் "OpenAI விற்பனைக்கு இல்லை" என தெரிவித்தார். மேலும், சாம் ஆல்ட்மேன், தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக "நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறோம்" என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu