உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார் - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

February 18, 2025

பிரிட்டன் தனது ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதால், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நேட்டோ அமைப்பில் பிரிட்டன் தனது பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்றும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து போர் தொடுத்துள்ள நிலையில், பிரிட்டன் அந்நாட்டின் பாதுகாப்புக்கு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உக்ரைனின் இறையாண்மையை பாதுகாக்க, அங்கு அமைதி ஏற்படுத்தவும், […]

பிரிட்டன் தனது ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதால், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நேட்டோ அமைப்பில் பிரிட்டன் தனது பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்றும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து போர் தொடுத்துள்ள நிலையில், பிரிட்டன் அந்நாட்டின் பாதுகாப்புக்கு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உக்ரைனின் இறையாண்மையை பாதுகாக்க, அங்கு அமைதி ஏற்படுத்தவும், அதை நிலைத்திருக்க செய்யவும் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் மாறிவரும் சூழல் குறித்து விவாதிக்க, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பாரீஸில் திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தினர். அதற்கு முன்பு எழுதிய கட்டுரையில் ஸ்டார்மர், உக்ரைனுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி பவுண்ட் உதவி வழங்கும் பிரிட்டன், தேவைப்பட்டால் ராணுவத்தையும் அனுப்பத் தயார் என தெரிவித்தார். இதற்கிடையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர், ரஷியாவிடம் 2014 இல் இழந்த பகுதிகளை மீட்க முடியாது என கூறிய நிலையில், அமெரிக்கா-ரஷியா அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, தங்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu