போரை நிறுத்த ரஷ்யாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் - அமெரிக்கா

July 10, 2024

உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று என்று அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி மார்கரேட் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்று அங்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அவர் உக்ரைன் போர் குறித்து பேசுகையில், உக்ரைன் […]

உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று
என்று அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி மார்கரேட் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்று அங்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அவர் உக்ரைன் போர் குறித்து பேசுகையில், உக்ரைன் பிரச்சனைக்கு போர் தீர்வு அல்ல. அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக இந்தியா தன் பங்களிப்பை வழங்க இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, உக்ரைனில் அமைதி நிலவ எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்று அமெரிக்கா கருதுகிறது. இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டும். இந்த போரை தொடங்கிய புதினால் அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும். ரஷ்யா உடன் இந்தியா நீண்ட கால நட்புறவு கொண்டுள்ளது. இதனை வைத்து போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா அதன் நட்புறவை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ரஷ்யாவின் போர் ஐநா சாசனத்தை மீறுவதாகும் என்று மார்கெட் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu