தமிழக சட்டசபை கூட்டம் மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது, அன்றே மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மார்ச் 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிவடைய, வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவற்றை மூலதன செலவுகள், பொருளாதார முன்னேற்ற திட்டங்கள், வருவாய் மதிப்பீடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், தமிழகத்தில் புதிய திட்டங்கள், தொழில்துறை வளர்ச்சி, திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.