விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கிய விண்வெளி வீரர்கள் மீட்பு

விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கிய விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக தரையிறங்கினர். விண்வெளியில் 286 நாட்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள், அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கியதை தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ், நாசா, மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமியை 4,576 முறை சுற்றி, 195 மில்லியன் கிலோமீட்டர் தூரம் கடந்து திரும்பினர். இந்திய நேரப்படி […]

விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கிய விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக தரையிறங்கினர்.

விண்வெளியில் 286 நாட்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள், அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கியதை தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ், நாசா, மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமியை 4,576 முறை சுற்றி, 195 மில்லியன் கிலோமீட்டர் தூரம் கடந்து திரும்பினர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா கடற்கரையில் அவர்கள் வெற்றிகரமாக தரையிறங்கினர். அவர்களுடன் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் மீட்கப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu