பஹல்காமில் உள்ள ஓர் ரிசார்ட் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீரின் அழகிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பஹல்காமில் உள்ள ஓர் ரிசார்ட் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட மொத்தம் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் தலைமையிடம் கொண்டுள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பை ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையில் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. உயிரிழந்தோரின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், தீவிர காயங்களுடன் சிகிச்சை பெறும்வர்கள் ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்குள்ளானவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.














