வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்களுக்குப் பின்னர் பதவி இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாகும் இந்த வழக்கில், ஹசீனாவுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வங்கதேசத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறை பாதையைத் தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து, ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார். அவரது மாளிகை முற்றுகையிடப்பட்டதால், இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தியா வந்த பின்னர், ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது, அந்த வழக்குகளில் முதன்மையான ஒன்று தீர்ப்பு பெற, 6 மாத சிறை தண்டனை எனக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வங்கதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.