கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் அச்சுறுத்தல் – 581 பேர் கண்காணிப்பில், அரசு தீவிர நடவடிக்கை

பல மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. கேரளத்தில் கடந்த சில ஆண்டுகளாக வைரஸ் நோய்கள் பரவலுடன் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில், நிபா வைரஸ் தாக்கம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் பிளஸ்-2 மாணவி உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது 581 பேர் நிபா […]

பல மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த சில ஆண்டுகளாக வைரஸ் நோய்கள் பரவலுடன் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில், நிபா வைரஸ் தாக்கம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் பிளஸ்-2 மாணவி உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது 581 பேர் நிபா தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இதில் 29 பேருக்கு மிகுந்த ஆபத்து, 78 பேருக்கு மிதமான ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலப்புரத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்து, கட்டுப்பாடு மண்டலங்களை அறிவிக்க மருத்துவ குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தெற்கு மாவட்டங்களுக்கும் நோய் பரவும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu