டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான Answer Key வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ Answer Key இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்களின் விடைகளை சுயமாக மதிப்பீடு செய்யலாம். தமிழ்நாடு அரசின் குரூப் 4 பணியிடங்களை நிரப்பும் வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணிகளுக்கான தேர்வு கடந்த 12ம் தேதி நடத்தப்பட்டது. இதற்காக 13.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றது உறுதியாகியுள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் 3 மாதத்திற்குள் […]

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ Answer Key இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்களின் விடைகளை சுயமாக மதிப்பீடு செய்யலாம்.

தமிழ்நாடு அரசின் குரூப் 4 பணியிடங்களை நிரப்பும் வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணிகளுக்கான தேர்வு கடந்த 12ம் தேதி நடத்தப்பட்டது. இதற்காக 13.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றது உறுதியாகியுள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தற்போது தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களின் விடைகள் சரியாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் Answer Key வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மதிப்பெண்களை சுயமாக கணிக்க மாணவர்கள் முன்னேற்பாடுகள் மேற்கொள்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu