கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து உயர்ந்தது, ஆனால் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்ததால் ஜூலை 22-ந்தேதி தங்கத்தின் விலை ரூ.2,200 வரை குறைந்தது. அதன்படி ஒரு பவுனின் விலை ரூபாய். 55,000-க்கு மேல் இருந்த நிலையில் விலை குறைப்பு காரணமாக 51,000-க்கு கீழே வந்தது. ஆனால் மீண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதபடி கடந்த 19-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,825 மற்றும் ஒரு பவுன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 21-ந்தேதி, தங்கத்தின் விலை ரூ.6,960 மற்றும் ரூ.55,680 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.56,000-க்கு விற்கப்படுகிறது, ஒரு கிராம் ரூ7,000-க்கு விற்கப்படுகிறது.