முன்னதாக ஜூலை 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட ஹஜ் பயண விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒரு வார காலம் கூடுதலாக வழங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஹஜ் அசோசியேஷன் இதனை உறுதி செய்துள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிர்ணயிக்கப்பட்ட புதிய கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஹஜ் பயணிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.