ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஹேர் ஆயில் முதல் மருத்துவப் பொருட்கள் வரை 5% மட்டுமே வரி

September 4, 2025

12% மற்றும் 18% வரியிலிருந்த பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் இப்போது 5% ஜிஎஸ்டி அடுக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளே அமலுக்கு வரவுள்ளன. புதிய ஜிஎஸ்டி முறை செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில், பல […]

12% மற்றும் 18% வரியிலிருந்த பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் இப்போது 5% ஜிஎஸ்டி அடுக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளே அமலுக்கு வரவுள்ளன. புதிய ஜிஎஸ்டி முறை செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில், பல அத்தியாவசிய மற்றும் தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கு வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களின் தேவைகள் அனைத்தும் 5% அடுக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, பல் ஃப்ளாஸ் ஆகிய தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் 18% இல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்கள், வெண்ணெய், நெய் மற்றும் பால் பொருட்கள் 12% இல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நொறுக்குத் தீனிகள், தையல் இயந்திரம் மற்றும் அதன் உதிரி பாகங்களும் 12% இல் இருந்து 5% வரி அடுக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன. மருத்துவ துறையில் தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருட்கள் மற்றும் கண்ணாடி மீதான ஜிஎஸ்டியும் 12% இல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்களின் செலவுகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu