அடுத்த 15 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.68.23 லட்சம் கோடி தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்ப உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.68,21,640 கோடி தேவைப்படும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.46 லட்சம் கோடி தேவை. ஆனால், தற்போது செலவழிக்கும் தொகை ரூ.1.43 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது. 2036 ஆம் ஆண்டில் 40% மக்கள் இந்தியாவில் நகர்ப்புற நகரங்களில் வசிப்பார்கள்.
இதனால் தூய்மையான அதிக குடிநீர் தேவை, நம்பகமான மின்சாரம், திறமையான மற்றும் பாதுகாப்பான சாலை போக்குவரத்து போன்ற பல்வேறு உள்கட்டமைப்பில் தரமாக மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.