தமிழகத்தில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பு

2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றையும் அதற்கு ஏற்றவாறு வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் […]

2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றையும் அதற்கு ஏற்றவாறு வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர், ஈரோட்டின் தாளவாடி, திண்டுக்கல்லின் ஒட்டன்சத்திரம், நெல்லையின் மானூர், திருப்பூரின் தாராபுரம், தர்மபுரியின் ஏரியூர், புதுக்கோட்டையின் ஆலங்குடி, திருவாரூரின் கூத்தாநல்லூர், வேலூரின் சேர்க்காடு , திருச்சியின் மணப்பாறை, விழுப்புரத்தில் செஞ்சி, கிருஷ்ணகிரியின் தளி, புதுக்கோட்டையின் திருமயம், ஈரோட்டில் அந்தியூர், கரூரின் அரவக்குறிச்சி, தஞ்சாவூரின் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல்லின் ரெட்டியார்சத்திரம், கடலூரில் வடலூர், காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் எல்லா வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டிடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2022-23-ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

3
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu