அ.தி.மு.க. பொதுச் செயலர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அ.தி.மு.க. சட்ட திட்ட விதியின்படி பொதுச் செயலர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த விதிமுறையின்படி பொதுச் செயலர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இன்று காலை வேட்பு மனு தாக்கல் துவங்கும். காலை 10:00 மணி முதல் நாளை மதியம் 3:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மார்ச் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை மார்ச் 21ம் தேதி மதியம் 3:00 மணி வரை திரும்ப பெறலாம். மேலும் மார்ச் 26ம் தேதி காலை 8:00 முதல் மாலை 5:00 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மறுநாள் 27ம் தேதி காலை 9:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.