நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி கட்சிகளும், அதனை எதிர்த்து அதிமுக தலைமையும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் என மூன்று அணிகள் களம் காண்கின்றனர். இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மூன்று அணிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காவது அணியாக நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி வருகிறது.