வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர் வி.பி.சிங். பெரியாரை உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள். ஆனாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.