விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டதாரி ஜப்பான் நாட்டு தூதுவராக நியமனம்

விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர் இந்திய நாட்டின் சார்பில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு விழுப்புரம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு காரைக்குடியில் பி.எஸ்.சி விவசாய பட்டத்தை முடித்து தொடர்ந்து டெல்லியில் எம்எஸ்சி அக்ரி,பிஹெச்டி படிப்பை முடித்துள்ளார். 2009இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி இரண்டாவது […]

விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர் இந்திய நாட்டின் சார்பில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த
சந்துரு என்பவர் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு விழுப்புரம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு காரைக்குடியில் பி.எஸ்.சி விவசாய பட்டத்தை முடித்து தொடர்ந்து டெல்லியில் எம்எஸ்சி அக்ரி,பிஹெச்டி படிப்பை முடித்துள்ளார். 2009இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி இரண்டாவது முயற்சியிலேயே ஐஎஃப்எஸ் பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதரக அலுவலகத்திலும் பின்னர் 2020 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலாளர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான மூன்று துணைத் தூதரகங்களில் ஒன்றான ஒசாகா பகுதி தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu