கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் மே மாதம் திறக்கப்பட உள்ளன.
வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில்
கிளாம்பாக்கத்தில், மக்களுக்கு மேலும் சுலபமான போக்குவரத்து வசதிகள் தர, புதிய ரெயில் நிலையம் கட்டபட்டுள்ளதால், அதற்கான பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகின்றன. தற்போது, ரெயில்வே அதிகாரிகள், இந்த ரெயில் நிலையம் மே மாதம் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் 3 நடைமேடைகளுடன் இந்த புதிய ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.