எச் ஐ வி தொற்றுக்கு உரிய மருந்து ஒன்று தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று பாதிப்புக்கு நிரந்தரவு தீர்வு காணும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்ஐவி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்ஐவி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் ஒரு மருந்து 100% செயல் திறனை காட்டியுள்ளது. இந்த மருந்து ஆண்டுக்கு இருமுறை ஊசி மூலமாக செலுத்தப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடைய கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது இளம் பெண்களைக் கொண்டு சோதனை முறையில் நடத்தப்பட்டு நிரூபணம் ஆகி உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல கட்ட சோதனைகள் நடைபெறும் என்றும் அது வெற்றி அடைந்த பிறகே இந்த மருந்து விற்பனைக்கு சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.














