சென்னையில் 5000 பேர் அமரக் கூடிய வகையில், கலைஞர் பெயரில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும். உலகின் பல நாடுகளில் இருப்பது போன்று 25 ஏக்கர் பரப்பளவில் 5000 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டமாக பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்ப கூட்டங்கள், உலக திரைப்பட விழாக்கள் நடத்தும் வகையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.