திருப்பதியில் தரிசன முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என திருப்பதி கோவில் தலைமை நிர்வாகி அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் பணி திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.