போலி கணக்குகள், திடீர் முன்பதிவு முடிவுகள், இடைத்தரகர்கள் காரணமாக ரெயில்வே OTP ஆதார சோதனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் ஆதார் சரிபார்ப்புக்கு தயார் ஆக வேண்டும்.
குறைந்த செலவு, வசதியான பயணம் என்பதால், ரெயில்களை தேர்வுசெய்யும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஆனால், சமீப காலங்களில் முன்பதிவில் சிக்கல்கள் அதிகரித்து, டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் முடிந்து விடுகின்றன. இடைத்தரகர்கள் காரணமாக உண்மையான பயணிகள் டிக்கெட் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால், ரெயில்வே துறை 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியதுடன், OTP அடிப்படையிலான ஆதார் பதிவு முறையை அறிமுகப்படுத்துகிறது. மேலும், “எம்ஆதார்” செயலி மூலம் பயணிகளின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும். தற்போது புகைப்பட அடையாள அட்டை போதுமானது என்றாலும், எதிர்காலத்தில் ஆதார் கட்டாயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.