ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இது மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும். இதில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றியை பதித்துள்ளது.