நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
டெல்லியில் வருகின்ற 9, 10 ஆம் தேதியில் நடைபெற உள்ள ஜி 20 சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடு தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக வெளியுறவு துறை அமைச்சகம் தயாரித்து வழங்கிய அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் அங்கு கலந்து கொள்பவர்களுக்கு அளிக்கும் புத்தகத்தில் பாரதம் ஜனநாயகத்தின் தாயகம் என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா என்பதன் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டம் தீட்டி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இதை பற்றி மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி பற்றிய அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவை பாரதம் என்றும் அழைக்க அழைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று அவசரமாக மத்திய மந்திரி சபை கூட்டத்தைக் கூட்டினார். இதில் பாரதம் பெயர் தொடர்பான சர்ச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது
மேலும் பல அலுவலகங்கள் பற்றியும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஆற்ற வேண்டிய அலுவல்கள் குறித்தும் பேசியதாக தெரிய வந்துள்ளது. ஜி 20 மாநாட்டிற்கு பின் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என தெரிய வருகிறது. அதனால் வரும் மத்திய மந்திரி சபை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.