கருக்கலைப்பு தடை சட்டம் அமெரிக்கர்களின் உரிமை மீறல் - வெள்ளைமாளிகை கண்டனம்

August 27, 2022

குடியரசுக் கட்சியினரால் இயற்றப்பட்ட கருக்கலைப்புத் தடை குறித்து வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 12 மாநிலங்களில் முழுமையாக கருக்கலைப்புத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இடாஹோ, ஓக்லஹோமா, டென்னசி மற்றும் டெக்சாஸில் ஆகிய பகுதிகளுக்கும் கருக்கலைப்பு தடைகள் நடைமுறைக்கு வருவிப்பதால், இந்த கருக்கலைப்பு தடையானது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று செய்தித் துறை செயலாளர் கரீன் ஜீன்-பியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இச்சட்டமானது பெண்களின் இனப்பெருக்க உரிமைகளைப் பறித்து, அவர்களின் […]

குடியரசுக் கட்சியினரால் இயற்றப்பட்ட கருக்கலைப்புத் தடை குறித்து வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 12 மாநிலங்களில் முழுமையாக கருக்கலைப்புத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இடாஹோ, ஓக்லஹோமா, டென்னசி மற்றும் டெக்சாஸில் ஆகிய பகுதிகளுக்கும் கருக்கலைப்பு தடைகள் நடைமுறைக்கு வருவிப்பதால், இந்த கருக்கலைப்பு தடையானது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று செய்தித் துறை செயலாளர் கரீன் ஜீன்-பியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இச்சட்டமானது பெண்களின் இனப்பெருக்க உரிமைகளைப் பறித்து, அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு குறித்த முடிவுகளில் அரசியல்வாதிகள் தலையிடுகிறார்கள் என்று அவர் கூறினார். மேலும் இந்த கருக்கலைப்பு தடை சட்டமானது அமெரிகர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கான முதல்படியாகும் என்று ௯றினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றமானது கருக்கலைப்பு அணுகல் மீதான முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில சட்டமன்றங்களிடம் ஒப்படைத்தது. அதனால் நாட்டின் பல பகுதிகளில் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu