அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, சபாநாயகர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இருந்து சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தன. குறிப்பாக, அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது தொடர்பாக ஜனநாயக கட்சியினருடன் இணக்கமாக இவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது, வலது சாரி குடியரசு கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றதில், 210 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், 216 பேர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆதரவு தெரிவித்தனர். எனவே, அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.