ரயில்களில் ஏசி-3 அடுக்கு பெட்டி விரைவில் நீக்கம்

November 21, 2022

ஏசி 3 அடுக்கு பொருளாதார வகுப்பு (3- இ) பெட்டிகளை நீக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது. ரயில்வேயில் 3 அடுக்கு ஏசி வகுப்புகள் தான் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகளாக உள்ளது. பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏசி பொருளாதார பெட்டிகள்(3- இ) அறிமுகம் செய்யப்பட்டது. ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம். ஆனால், ஏசி 3 இ பெட்டியில் 83 பேர் […]

ஏசி 3 அடுக்கு பொருளாதார வகுப்பு (3- இ) பெட்டிகளை நீக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது.

ரயில்வேயில் 3 அடுக்கு ஏசி வகுப்புகள் தான் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகளாக உள்ளது. பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏசி பொருளாதார பெட்டிகள்(3- இ) அறிமுகம் செய்யப்பட்டது. ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம். ஆனால், ஏசி 3 இ பெட்டியில் 83 பேர் பயணம் செய்ய முடியும்.

ஆனால் தற்போது ரயில்களில் 3-இ என்ற வசதி இல்லை. ஏசி 3- இ பெட்டிகளை ரத்து செய்ய ரயில்வே முடிவு எடுத்துள்ளது என தெரிகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அடுத்த சில மாதங்களுக்கு ரயில்களில் ஏசி 3- இ வகுப்பு இருக்காது. 3-இ பொருளாதார வகுப்பு ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும். இந்த பணி 4 மாதங்களில் முடிக்கப்படும். தற்போது 463 ரயில்களில் ஏசி 3- இ பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu