தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா பல்வேறு படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். தற்போது இந்தியாவின் டி 10 தொடர் நடத்தப்பட இருக்கிறது. இது ஐ.எஸ்.பி.எல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் முழுவதும் டென்னிஸ் பந்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் இது 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டியானது 2024 ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அதில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூர் அணியை ரித்திக் ரோஷன், ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமார், ஹைதராபாத் அணியை ராம்சரனும் வாங்கினார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, சென்னை அணியினை வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்