அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது. இந்த கையகப்படுத்தல் காரணமாக, அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற்று வருகின்றன.
கடந்த மே 15 ஆம் தேதியோடு, எஸ்ஸார் டிரான்ஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்திற்கு கீழ் உள்ள பரிமாற்ற பரப்பளவு 21182 ckt கிலோமீட்டர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த கையகப்படுத்தல் அதானி குழுமத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய படிக்கல்லாக அமைந்துள்ளது.