அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர் (எஃப் பி ஓ) தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் பங்குகளை இந்த நாட்களில் பொதுமக்கள் வாங்க முடியும். இந்நிலையில், ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து, 5985 கோடி ரூபாய் நிதியை, இந்த நிறுவனம் ஏற்கனவே திரட்டி உள்ளது. இந்திய எஃப் பி ஓ வரலாற்றில், அதிகமாக திரட்டப்பட்ட நிதியாக இது கருதப்படுகிறது.
அதானி குழுமத்தின் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு, 50 பில்லியன் டாலர்கள் வரை நிதி தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்த எஃப் பி ஓ தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த எஃப் பி ஓ வில் 35% அதாவது 7000 கோடி ரூபாய் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 3000 கோடி ரூபாய் நிறுவனம் இல்லாத முதலீட்டாளர்களுக்கும், 10000 கோடி ரூபாய் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.