ஹைட்ரஜனில் இயங்கும் ட்ரக்குகள் அறிமுகம் - அதானி குழுமம் அறிவிப்பு

January 18, 2023

அதானி குழுமம் ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார ட்ரக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, அசோக் லேலண்ட் மற்றும் கனடாவின் பல்லர்ட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஹைட்ரஜன் டிரக்குகள், சுரங்கத் துறைக்கு தேவையான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பல்லர்ட் நிறுவனம், ஹைட்ரஜன் ட்ரக்குக்கு தேவையான எரிபொருள் என்ஜினை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்யும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு […]

அதானி குழுமம் ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார ட்ரக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, அசோக் லேலண்ட் மற்றும் கனடாவின் பல்லர்ட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஹைட்ரஜன் டிரக்குகள், சுரங்கத் துறைக்கு தேவையான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பல்லர்ட் நிறுவனம், ஹைட்ரஜன் ட்ரக்குக்கு தேவையான எரிபொருள் என்ஜினை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்யும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டு திட்டத்தில் உருவாகும் ஹைட்ரஜன் ட்ரக்குகள் நிகழாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 டன் எடையுள்ள இந்த ஹைட்ரஜன் டிரக் வாகனத்தை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் 3 ஹைட்ரஜன் டேங்குகள் இருக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu