சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ இந்தியாவில் புதிய கைபேசி தயாரிப்பு ஆலை தொடங்குகிறது. வரும் ஜூலை மாதம் முதல் விவோ கைபேசி உற்பத்தி ஆலை செயல்பாடுகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலையில், ஒரு வருடத்திற்கு 120 மில்லியன் கைபேசிகள் உருவாக்கப்படும். கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
விவோ கைபேசி நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலையை செயல்படுத்துவதற்கு இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்துடன் கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளது. இதற்காக, டாடா குழுமம், முருகப்பா குழுமம், டிக்சன் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், புதிய ஆலையில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்காக, ஆண்டுக்கு 40 மில்லியன் கைப்பேசிகளை தயாரித்து வந்த பழைய ஆலையை விட்டு விவோ வெளியேறி உள்ளது.