அதானி மற்றும் வில்மர் நிறுவனங்களின் கூட்டு வர்த்தக அமைப்பான அதானி வில்மர் - ல் இருந்து, அதானி குழுமம் வெளியேறுவதாக நேற்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து, அதானி வில்மர் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த நிலையில், அதானி வில்மரில் இருந்து வெளியேறவில்லை என அதானி குழுமம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
அதானி வில்மர் நிறுவனத்தில் இருந்த 44% பங்குகளை அதானி குழுமம் விற்க உள்ளதாக ஒரு நாளுக்கு முன்னர் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த அதானி குழுமம், “செபியின் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, அதானி வில்மர் கூட்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் எந்த முடிவையும் அதானி குழுமம் எடுக்கவில்லை” எனக் கூறியுள்ளது.