அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்காக நிதி முறைகேடுகள் குவிக்கப்படுவதை தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடும் சரிவை பதிவு செய்துள்ளது. அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் கீழாக பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 136 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதைத்தொடர்ந்து, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை வெளிவந்ததிலிருந்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர் சரிவை பதிவு செய்து வந்தது. அதன் எதிரொலியாக நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பு குறைத்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போர்ப்ஸ் நிறுவனமும் அதானி குழுமத்தின் மீதான நிதி மோசடிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. எனவே, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு மேலும் சரியலாம் என்று கூறப்படுகிறது.