இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்களும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் 5 முதல் 6% உயர்வை பதிவு செய்துள்ளன. மேலும், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி, அதானி வில்மர் போன்ற அதானி குடும்ப நிறுவனங்கள் 3 முதல் 5% உயர்வை பதிவு செய்துள்ளன. ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் போன்ற அதானி குடும்பத்தின் சிமெண்ட் நிறுவனங்கள் 2% உயர்வை பதிவு செய்துள்ளன.
அதானி பவர் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் கணிப்புகளை விட கூடுதல் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக, அதானி குழுமத்தின் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு ஏற்றம் பெற்றுள்ளது. இது தவிர, அதானி குழுமம் சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத இடத்தை பெறும் எனவும், தொடர் உயர்வுகளை பதிவு செய்யும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.














