அமெரிக்காவில், கூகுள் நிறுவனத்திற்கு 93 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 7000 கோடி ரூபாய் ஆகும்.
பயனர்களின் அனுமதி இன்றி, பயனர்களுக்கு தெரியாமல், அவர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக, கூகுள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த இந்த வழக்கில், கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் இருப்பிடத்தை பகிரும் அம்சத்தை ஆஃப் செய்து வைத்த பயனர்களின் இருப்பிட விவரங்கள், கூகுள் வெப் மூலமாக மாற்று வழியில் சேகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் தரப்பில் குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கொள்கைகள் மூலமாக இதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக வாதிட்டது. எனினும், கூகுள் நிறுவனம், அபராதத் தொகையை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.