அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 76% உயர்ந்து 2040 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19% உயர்ந்து 6897 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, 2024 ஆம் நிதி ஆண்டுக்கு, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் 2 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட ஒரு பொதுப்பங்குக்கு 6 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வனி குப்தா, அதானி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டார். அப்போது, இரண்டே ஆண்டுகளில் 100 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு அதானி போர்ட்ஸ் சாதனை படைத்துள்ளதாக கூறினார். மேலும், 2025 க்குள் 500 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் இலக்கை நோக்கி நிறுவனம் பயணித்து வருவதாக கூறினார்.