அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகள் சரிவு - 4 நாட்களில் 1.7 லட்சம் கோடி சந்தை மதிப்பிழப்பு

December 24, 2022

கடந்த 4 வர்த்தக நாட்களில், அதானி குழுமத்தின் ஏழு பங்குகள் மிகவும் சரிவை சந்தித்துள்ளன. அவற்றின் மதிப்பு ஒருங்கிணைந்த முறையில் 1.7 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை வர்த்தக நாளில், அதானி வில்மர் பங்குகள் 7% சரிந்து, 512.65 ஆக பதிவானது. அதானி பவர் பங்குகள் 5% குறைந்து 262.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் 6.82% குறைந்து, 2345.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட சரிவு விவரங்களை கணக்கிட்டால், அதானி […]

கடந்த 4 வர்த்தக நாட்களில், அதானி குழுமத்தின் ஏழு பங்குகள் மிகவும் சரிவை சந்தித்துள்ளன. அவற்றின் மதிப்பு ஒருங்கிணைந்த முறையில் 1.7 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை வர்த்தக நாளில், அதானி வில்மர் பங்குகள் 7% சரிந்து, 512.65 ஆக பதிவானது. அதானி பவர் பங்குகள் 5% குறைந்து 262.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் 6.82% குறைந்து, 2345.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட சரிவு விவரங்களை கணக்கிட்டால், அதானி வில்மர், அதானி பவர் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றின் பங்கு மதிப்பு சரிவு, முறையே, 18.53%, 14.23%, 12.5% ஆக பதிவாகி உள்ளது.

பங்குச்சந்தை சரிவு காரணமாக அதானி குழுமத்தின் ஏழு பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பிழப்பு 17.04 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது நான்கு நாட்களில் 9.41% சரிவாகும். குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் என்ற பிரதான நிறுவனத்தின் இழப்பு 40000 கோடியாக பதிவாகியுள்ளது. அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களும் கணிசமான சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu