அதானி பவர் நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 44% உயர்ந்து, 7764 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் நிகர லாபம் 8.77 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இது 218.49 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தியாளரான அதானி பவர், 13610 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அணில் சர்த்தனா, "அதானி பவர் நிறுவனம் சிறப்பான முறையில் மின் உற்பத்தி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், பசுமை எரிசக்தி நிலையங்கள் அமைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் உயர்விலும் கணிசமான வளர்ச்சி பதிவாகி வருகிறது. எனினும், முதலீடுகள் அதிகரித்துள்ளதால் லாபம் குறைந்துள்ளது" என்று கூறினார்.