அதானி குழுமம், ஸ்டார்க் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ட்ரெயின் மேன் தளத்தின் 100% பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, விரைவில், இணையவழியில் ரயில் பயணச்சீட்டுகளை அதானி குழுமம் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெயின் மேன் தளம் என்பது ஐ ஆர் சி டி சி யின் அதிகாரப்பூர்வ பயணச்சீட்டு புக் செய்யும் முகமை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு விற்பனைக்கான ஒப்பந்தத்தில் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டிஜிட்டல் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.