சபரிமலையில் பக்தர்களுக்கு ஏதுவாக கொச்சி-சென்னை இடையே விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில், கார்த்திகை மாதம் முதல் திறக்கப்பட்டு, மகர ஜோதிக்கு முன்பாக சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு, சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.அதன்படி
சென்னை மற்றும் கொச்சி இடையே, தினமும் 8 புறப்பாடு விமானங்கள் இயக்கப்படுகின்றன, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதல் சேவையாகும்.