டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் குரூப்-1 குரூப் 2 குரூப் 4 ஆகிய பல்வேறு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 பணியிடங்களுக்கும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 1820 காலிபணியிடங்கள் என மொத்தம் 2327 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் ஜூன் 20 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. மேலும் தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணைய வழியில் விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை காரணமாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.