தேனியில் அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

September 20, 2023

தேனியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை,சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் மலை அடிவாரத்தில் உள்ள பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து […]

தேனியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை,சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது.
கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் மலை அடிவாரத்தில் உள்ள பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் யானைகள் அங்கே முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க, சுற்றுப்பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu