ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT கருவி சூரியனின் புற ஊதா அலைநீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது. இது 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் குறித்தான, சிக்கலான வடிவம் ஆகியவற்றை தெளிவாக புகைப்படம் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியன் பற்றிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.