சூரிய புயலை படம் பிடித்த இஸ்ரோவின் ஆதித்யா

மே மாதத்தின் முதல் வாரத்தில் சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்பட்டன. இந்த சூரிய புயலின் தாக்கம் குறித்து இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம் தகவல் அனுப்பி உள்ளது. சூரியனிலிருந்து ஏ ஆர் 13664 என்ற சூரிய புள்ளி அதி சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப்படுத்தியது. இதனால் உருவான சூரிய புயலின் தாக்கத்தை ஆதித்யா எல் 1 பதிவு செய்துள்ளது. சூரிய புயலைத் தொடர்ந்து இன்றைய நாள் வரை அதிவேக சூரிய காற்று மற்றும் அதிக […]

மே மாதத்தின் முதல் வாரத்தில் சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்பட்டன. இந்த சூரிய புயலின் தாக்கம் குறித்து இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம் தகவல் அனுப்பி உள்ளது.

சூரியனிலிருந்து ஏ ஆர் 13664 என்ற சூரிய புள்ளி அதி சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப்படுத்தியது. இதனால் உருவான சூரிய புயலின் தாக்கத்தை ஆதித்யா எல் 1 பதிவு செய்துள்ளது. சூரிய புயலைத் தொடர்ந்து இன்றைய நாள் வரை அதிவேக சூரிய காற்று மற்றும் அதிக வெப்பம் கொண்ட பிளாஸ்மா சூரிய காற்று அந்த பகுதியில் வீசி வருவதாக ஆதித்யா எல் 1 தெரிவித்துள்ளது. கடந்த மே 11 ஆம் தேதி, சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. கடந்த 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகும் சக்தி வாய்ந்த சூரிய புயலாக இது கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் ஆதித்யா எல் 1 அனுப்பிய தகவல்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu