1000 முதல் 1200 கோடி நிதி திரட்டும் திட்டத்தில் களமிறங்கும் அடையார் ஆனந்த பவன்

July 11, 2024

அடையார் ஆனந்த பவன் உணவகம் 1000 முதல் 1200 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 35% பங்குகளை விற்பனை செய்து இந்த நிதி திரட்டப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டிலும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அடையார் ஆனந்த பவன் உணவகச் சங்கிலியின் இணை தோற்றுநர் ஸ்ரீனிவாச ராஜா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு அடையாறில் சிறிய உணவகமாக ஆனந்த பவன் […]

அடையார் ஆனந்த பவன் உணவகம் 1000 முதல் 1200 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 35% பங்குகளை விற்பனை செய்து இந்த நிதி திரட்டப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டிலும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அடையார் ஆனந்த பவன் உணவகச் சங்கிலியின் இணை தோற்றுநர் ஸ்ரீனிவாச ராஜா இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு அடையாறில் சிறிய உணவகமாக ஆனந்த பவன் தொடங்கப்பட்டது. தற்போது, உலகெங்கும் கிட்டத்தட்ட 150 உணவகங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த உணவக எண்ணிக்கையை 400 முதல் 500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பங்கு வெளியிட்டின் மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu