ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முஜீப் - உர் - ரஹ்மான், பசல் ஹக் பருக்கி, நவீன் உல் ஹக் ஆகியோர் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களான முஜீப் - உர் - ரஹ்மான், பசல் ஹக் பருக்கி, நவீன் உல் ஹக் பல்வேறு நாடுகளில் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர் . அவர்கள் மூவரையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் இவர்கள் மூவருக்கும் இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டில் போட்டியில் பங்கேற்க தடை இல்லா சான்று வழங்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக முன்னுரிமை அளிப்பதால் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.