பாகிஸ்தானில் ஆப்கன் அகதிகள் வேகமாக வெளியேறுகின்றனர்

October 31, 2023

பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் 17 லட்சம் ஆப்கானியர்கள் நாளை முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இது குறித்து பாக் உள்துறை அமைச்சர் புக்தி கூறியதாவது, பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். அதை ஏற்று சுமார் 20,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். இந்த நடவடிக்கையை நாளை தொடங்கி படிப்படியாக நிறைவேற்றப்படும். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான […]

பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் 17 லட்சம் ஆப்கானியர்கள் நாளை முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இது குறித்து பாக் உள்துறை அமைச்சர் புக்தி கூறியதாவது, பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். அதை ஏற்று சுமார் 20,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். இந்த நடவடிக்கையை நாளை தொடங்கி படிப்படியாக நிறைவேற்றப்படும். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் பகுதியில் அண்மை காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு அந்த நாட்டு அகதிகள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு நம்புகிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.' என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu