மத்திய ஆப்பிரிக்காவில் டி ஆர் காங்கோ என்ற நாடு உள்ளது. இந்த நாட்டில் உள்ள அகதிகள் மையத்தில் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சி ஓ டி இ சி ஓ என்ற ஆயுத குழு, லெண்டு இன மக்களை ஹெமா என்ற மற்றொரு இனத்திடமிருந்தும், டி ஆர் காங்கோ ராணுவத்திடம் இருந்தும் பாதுகாப்பதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுதக் குழு, ஹெமா இன மக்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில், 46 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில், இனக்குழுக்களுக்கு இடையே இது போன்ற வன்முறை தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதல் நடந்த பகுதி ஐநா அமைதிப்படை முகாமுக்கு மிக அருகில் அமைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.